Recent Post

6/recent/ticker-posts

உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி 2023 / WORLD CUP SHOOTING COMPETITION 2023

  • எகிப்து தலைநகர் கெய்ரோவில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் நடக்கிறது. இதன் 'ஸ்கீட்' கலப்பு அணிகளுக்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் மைராஜ் அகமது, கனேமத் ஜோடி பங்கேற்றது. 143 புள்ளிகள் பெற்ற இவர்கள் முதலிடம் பிடித்து தங்கத்திற்கான போட்டிக்கு முன்னேறினர். 
  • சக போட்டியாளராக மெக்சிகோவின் ஆலிவர்ஸ், கேப்ரியல்லா ஜோடி பங்கேற்றது. 43 வயதான அகமதுவின் அனுபவம், கனேமத்தின் (22 வயது) துடிப்பான செயல்பாடு கைகொடுத்தது.
  • முடிவில், 6-0 என வெற்றி பெற்ற இந்திய ஜோடி தங்கப்பதக்கம் கைப்பற்றியது. இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கமாக அமைந்தது. 
  • அகமது 'சீனியர்' அளவில் வென்ற ஐந்தாவது பதக்கம். கனேமத்தை பொறுத்தவரை 4வது பதக்கம். கலப்பு அணிகள் பிரிவில் இவர் கைப்பற்றிய 2வது பதக்கம் இதுவாகும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel