Recent Post

6/recent/ticker-posts

விக்ராந்த் கப்பலில் இரவு நேரத்தில் மிக் 29கே போர் விமானம் இறங்கி வரலாற்று சாதனை / MiG 29K fighter jet landing at night on board Vikrant is a historic achievement

  • ராணுவ தளவாட உற்பத்தியில் நம் நாடு தன்னிறைவு பெற்று வரும் வேளையில், நம் கடற்படைக்காக ஐ.என்.எஸ்., விக்ராந்த் என்ற மிக பிரமாண்ட விமானம் தாங்கி போர் கப்பலை, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு செப்., மாதம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த கப்பலின் வாயிலாக, 40 ஆயிரம் டன்னுக்கும் அதிகமான எடையை தாங்கக் கூடிய, விமானம் தாங்கி போர் கப்பல்களை தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்தது.
  • மொத்தம் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில், வான்வழி மற்றும் கப்பல் வழி ஏவுகணை தாக்குதல்களை முறியடிக்கும் அதிநவீன வசதிகள் உள்ளன.
  • இதில் ஒரே நேரத்தில் 30 போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் நிறுத்த முடியும்.இந்த விமானம் தாங்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் போது, 'இது ஒரு மிதக்கும் நகரம்' என, பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
  • இந்த ஐ.என்.எஸ்., விக்ராந்த் விமானம் தாங்கி கப்பலில், பல்வேறு போர் விமானங்களை தரை இறக்கச் செய்யும் பயிற்சிகள் அவ்வப்போது நடந்து வருகின்றன. 
  • இந்த வரிசையில், ரஷ்ய தயாரிப்பான, மிக் 29கே போர் விமானம் மற்றும் கடற்படைக்காக தயாரிக்கப்பட்ட இலகு ரக தேஜஸ் போர் விமானங்களை, ஐ.என்.எஸ்., விக்ராந்த் கப்பலில் நம் வீரர்கள் கடந்த பிப்., மாதம் தரை இறக்கினர். 
  • மேலும், இரவு நேரங்களில் போர் விமானங்கள் கப்பலில் இதுவரை தரை இறக்கப்பட்டது இல்லை.இந்நிலையில், விக்ராந்த் கப்பல் அரபிக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த போது, இரவு நேரத்தில் மிக் 29கே போர் விமானத்தை பைலட்கள் முதல்முறையாக தரை இறக்கினர்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel