Recent Post

6/recent/ticker-posts

3வது முறையாக தமிழக அமைச்சரவை மாற்றம் / Tamil Nadu cabinet change for the 3rd time

  • தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து 2 ஆண்டுகள் முடிந்த நிலையில், அமைச்சரவையில் 3-வது முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 
  • பால்வளத் துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் நீக்கப்பட்டு, அவருக்குப் பதில் மன்னார்குடி எம்எல்ஏ-வும், திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மகனுமான டி.ஆர்.பி.ராஜா அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். இதற்கான அறிவிப்பு கடந்த 9-ம் தேதி வெளியானது.
  • சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், புதிய அமைச்சராக டிஆர்பி.ராஜாவுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். 
  • தமிழக அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த சா.மு.நாசர் நீக்கப்பட்டு, டிஆர்பி.ராஜா புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றார். இதையடுத்து, அமைச்சர்களின் பொறுப்புகளில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
  • அதன்படி, புதிய அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள டிஆர்பி.ராஜாவுக்கு, அமைச்சர் தங்கம் தென்னரசு கவனித்து வந்த தொழில் துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
  • பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் கவனித்து வந்த நிதி, திட்டம் மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை, ஓய்வூதியம் மற்றும் ஓய்வுகால பலன்கள், புள்ளியியல் ஆகிய துறைகள் தங்கம் தென்னரசுவுக்கு வழங்கப்பட்டுள்ளன. அவர் ஏற்கெனவே வகித்து வந்த தொல்லியல் துறையும் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
  • அமைச்சர் தங்கம் தென்னரசு வசமிருந்த தமிழ் வளர்ச்சி, தமிழ் ஆட்சிமொழித் துறை ஆகியவை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
  • அமைச்சர் த.மனோ தங்கராஜ் கவனித்து வந்த தகவல் தொழில்நுட்பத் துறை, பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனுக்கும், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட நாசர் கவனித்து வந்த பால்வளத் துறை மனோ தங்கராஜுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel