Recent Post

6/recent/ticker-posts

ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி கருவிகள் கொண்ட 4 வது ஆக்கபூர்வ உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் / Ministry of Defense approves 4th constructive indigenization list of 928 ready-to-use equipment of military importance

  • DAபாதுகாப்புத் துறையில் '‘தற்சார்பு இந்தியா’'வை மேம்படுத்துவதற்கும், பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களின் இறக்குமதியைக் குறைப்பதற்கும், ரூ. 715 கோடி மதிப்புள்ள இறக்குமதி மானியத்துடன் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த 928 உடனடி மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் கொண்ட 4வது ஆக்கபூர்வ உள்நாட்டுமயமாக்கல் பட்டியலுக்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்த சாதனங்களின் விவரங்கள் ஸ்ரீஜன் இணையப்பாக்கத்தில் (https://srijandefence.gov.in/) கிடைக்கின்றன. பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள காலக்கெடுவிற்குப் பிறகே இவை இந்தியத் தொழில்துறையிலிருந்து கொள்முதல் செய்யப்படும்.
  • இந்த நான்காவது உள்நாட்டு மயமாக்கல் பட்டியல் (பிஐஎல்) மாற்றுக் கருவிகள்/துணை அமைப்புகள்/உதிரி பாகங்கள் தொடர்பாக 2021 டிசம்பர், 2022 மார்ச், 2022 ஆகஸ்ட் என ஏற்கனவே வெளியிடப்பட்ட மூன்று பட்டியல்களின் தொடர்ச்சியாகும். 
  • ஏற்கனவே வெளியிடப்பட்ட பட்டியல்களில் 2,500 சாதனங்கள் உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன. மேலும் 1,238 (351+107+780) சாதனங்கள் குறிப்பிட்ட காலவரம்புக்குள் உள்நாட்டுமயம் ஆக்கப்படவுள்ளன. இவற்றில் 310 சாதனங்கள் (1வது பிஐஎல் - 262, 2வது பிஐஎல் - 11, 3வது பிஐஎல் - 37) இதுவரை உள்நாட்டுமயம் ஆக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel