ஏர் மார்ஷல் பாலகிருஷ்ணன் மணிகண்டன் விமானப் படையின் தென்மண்டல தளபதியாக நியமனம் / Air Marshal Balakrishnan Manikandan has been appointed as the South Regional Commander of the Air Force
ஏர் மார்ஷல் பாலகிருஷ்ணன் மணிகண்டன் 01 மே 23 அன்று விமானப்படையின் தென் மண்டல தளபதியாக பொறுப்பேற்றார். கஜகூட்டம் சைனிக் பள்ளி மற்றும் நேஷனல் பாதுகாப்பு அகாடமியின் முன்னாள் மாணவரான அவர், இந்திய விமானப்படையில் 1986 ஜூன் 7 ந்தேதி நியமிக்கப்பட்டார்.
அவர் பல்வேறு வகையான ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்களில் 5,400 மணி நேரத்திற்கும் மேல் பறந்துள்ளார். அவர் ஒரு தாக்குதல் ஹெலிகாப்டர் தலைவராகவும், பறக்கும் பயிற்றுவிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார்.
வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியில் முதுகலைப் பட்டமும், செகந்திராபாத் காலேஜ் ஆஃப் டிஃபென்ஸ் மேனேஜ்மென்ட்டில் எம்எம்எஸ் பட்டமும், புது தில்லி தேசிய பாதுகாப்பு கல்லூரியில் எம் ஃபில் பட்டமும் பெற்றுள்ளார்.
விமானப்படையின் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றிய அவர், இதற்கு முன்பு விமானப்படையின் கிழக்கு பிரிவில் மூத்த விமானப் பணியாளர் அதிகாரியாக இருந்தார்.
ஏர் மார்ஷல் பாலகிருஷ்ணன் மணிகண்டன் அதி விஷிஷ்ட் சேவா பதக்கம் மற்றும் வாயு சேனா பதக்கம் ஆகிய குடியரசு தலைவர் விருதுகளைப் பெற்றவராவார்.
0 Comments