Recent Post

6/recent/ticker-posts

தில்லியில் காற்றின் தரக் குறியீடு / AIR QUALITY INDEX AT DELHI 2023

  • மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் காற்றுத் தரக் குறியீட்டுத் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் தில்லியில் காற்றின் தரம் “சிறந்தது” முதல் “மிதமான'து என்ற அளவில் அதிக நாட்கள் இருந்துள்ளது. 
  • 2016 முதல் கடந்த 7 ஆண்டுகளில் கோவிட் கால ஊரடங்கு காலத்தைத் தவிர பிற காலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்த நான்கு மாத காலப்பகுதியில் தான் அதிக நாட்கள் நல்ல நிலையில் காற்றின் தரக் குறியீடு இருந்துள்ளது.
  • ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 2016-ம் ஆண்டில் 8 நாட்களும், 2017-ம் ஆண்டில் 29 நாட்களும் 2018-ம் ஆண்டில் 32 நாட்களும் 2019-ம் ஆண்டில் 44 நாட்களும், 2020-ம் ஆண்டில் 68 நாட்களும், 2021-ம் ஆண்டில் 31 நாட்களும், 2022-ம் ஆண்டில் 27 நாட்களும் காற்றின் தரம் “சிறப்பு” அல்லது “மிதமானது” என்ற நிலையில் இருந்துள்ளது. 
  • இதில் 2020-ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் கோவிட் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது, நடப்பு 2023-ம் ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான காலகட்டத்தில் 52 நாட்கள் காற்றின் தரக் குறியீடு நல்ல நிலையில் அல்லது மிதமான நிலையில் இருந்துள்ளது.
  • கோவிட் பாதிப்புக் காலத்தைத் தவிர கடந்த 7 ஆண்டுகளை ஒப்பிடுகையில், 2023-ம் ஆண்டில் இதுவரை தில்லியில் மிகக் குறைந்த நாட்களே ‘மோசமானது முதல் மிக மோசமானது’ என்ற தரக் குறியீடு பதிவாகியுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel