Recent Post

6/recent/ticker-posts

மகேந்திரகிரியில் இஸ்ரோ மேற்கொண்ட செமி-கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை வெற்றி / ISRO semi-cryogenic engine test success at Mahendragiri

  • தமிழகத்தின் மகேந்திரகிரியில் இஸ்ரோவின் ராக்கெட் இன்ஜின் பரிசோதனை மையம் உள்ளது. இங்கு செமி-கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனை மையம் புதிதாக தொடங்கப்பட்டது.
  • இங்கு 2000 கே.என் (கிலோநியூடன்) திறனுள்ள செமிகிரையோஜெனிக் இன்ஜின் நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தலைமையகம் தெரிவித்தது.
  • இந்த 2000 கே.என் இன்ஜின் திரவ ஆக்ஸிஜன் மற்றும் மண்ணெண்ணெய் மூலம் இயங்கக் கூடியது. இந்த வகை இன்ஜின்கள் எதிர்காலத்தில் அனுப்பப்படும் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படவுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
  • இந்த இன்ஜினில் உள்ள குறைந்த அழுத்தம் மற்றும் அதிக அழுத்தம் கொண்ட டர்போ பம்ப்புகள், காஸ் ஜெனரேட்டர், கட்டுப்பாட்டு கருவிகளின் செயல்பாடுகள் நேற்று முதல் முறையாக பரிசோதனை செய்யப்பட்டன. 
  • இந்த இன்ஜின் வடிவமைப்பை இஸ்ரோவின் திரவ எரிபொருள் இன்ஜின் மையம் (எல்பிஎஸ்சி) உருவாக்கியது. முழு அளவிலான இன்ஜின் பரிசோதனைக்கு முன்பாக, நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட செமி-கிரையோஜெனிக் இன்ஜின் சோதனை மிக முக்கிய சாதனை என இஸ்ரோ கூறியுள்ளது.
  • சுமார் 15 மணி நேரம் நடந்த இந்த சோதனை வெற்றிகரமாக முடிந்தது. செமி-கிரையோஜெனிக் இன்ஜினின் இந்த பரிசோதனை அடுத்தகட்ட பரிசோதனைகளுக்கு வழிவகுத்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் அதிக எடையுடன் கூடிய செயற்கை கோள்களை, இஸ்ரோ ராக்கெட் டுகள் கொண்டு செல்லும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel