துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழித் துறை அமைச்சகம், கடல்சார் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான சிந்தனைக் கூட்டம் / Meeting on Building a Maritime Self-Reliance India
துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம் (MoPSW) 2 நாள் சிந்தனைக் கூட்டத்தை கேரளாவின் மூணாறில் தொடங்கியுள்ளது. மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் தலைமையேற்று கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
துறைக்கான இணை அமைச்சர் திரு ஸ்ரீபத் நாயக், திரு. சாந்தனு தாக்கூர், துறை செயலாளர் திரு சுதான்ஷ் பந்த் மற்றும் அனைத்து முக்கிய துறைமுகங்களின் தலைவர்கள், அமைச்சகத்தின் பிற நிறுவனங்கள்/பொதுத்துறைத் தலைவர்கள் உள்பட பல மூத்த அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சிந்தனைக் கூட்டத்தின் முதல் நாளில், முந்தைய கூட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் மற்றும் சாதனைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
திரு சர்பானந்தா சோனோவால் தலைமையில், துறைமுகங்களின் புதுமையான யோசனைகள் குறித்து பெரிய துறைமுகங்களின் தலைமை அதிகாரிகளுடன் ஒரு பிரத்யேக அமர்வு கவனம் செலுத்தியது.
மற்றைய அமர்வில் கலங்கரை விளக்க சுற்றுலா மற்றும் கப்பல் கட்டுமானத்தில் உலகளாவிய தலைமையாக இந்தியாவை உருவாக்குவது குறித்து கவனம் செலுத்தப்பட்டது. இது தவிர, பல்வேறு நிறுவனங்களின் பங்கேற்பாளர்கள் தங்கள் நுட்பமான ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டனர்.
இரண்டாம் நாள் கூட்டத்தில், முக்கிய துறைமுகங்கள் மூலம் சரக்கு கையாளுதல், துறைமுக அழைப்பு நடைமுறைகளை மேம்படுத்துதல் டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தரப்படுத்துதல், உள்நாட்டு நீர்வழிகள் மற்றும் கடலோரக் கப்பல் போக்குவரத்தை மேம்படுத்துதல் போன்றவற்றில் கவனம் செலுத்தி விவாதிக்கப்பட்டது.
0 Comments