Recent Post

6/recent/ticker-posts

TN 12th Result 2023: இன்று வெளியாகிறது +2 தேர்வு முடிவுகள்..!! எங்கே எப்படி பார்க்கணும் தெரியுமா ?


தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ம் தேதி தமிழ் பாடத்துடன் தொடங்கியது. இந்த தேர்வு கடந்த மாதம் 3-ம் தேதியுடன் நிறைவு பெற்றது.

இந்த தேர்வை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 8 லட்சத்து 51 ஆயிரத்து 303 மாணவ, மாணவிகள் எழுத விண்ணப்பித்து இருந்தனர். இவர்களில் சுமார் 50 ஆயிரம் பேர் தேர்வை எழுதவில்லை என கூறப்படுகிறது.

அதன்படி பார்க்கையில் சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த தேர்வை எழுதி இருக்கின்றனர். தேர்வு முடிந்ததும், மாணவ, மாணவிகள் எழுதிய விடைத்தாள் திருத்தும் பணி கடந்த மாதம் 10-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 79 மையங்களில் நடந்தது. விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவு பெற்று, மதிப்பெண்கள் பதிவேற்றப்பட்டு, தயார் நிலையில் இருக்கின்றன.

 
கடந்த 5-ம் தேதி தேர்வு முடிவு வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டு, நீட் தேர்வை கருத்தில் கொண்டு, தேர்வு முடிவு இன்று (மே 8) வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பின்படி ப்ளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடவுள்ளார்.

தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge.tn.gov.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதள முகவரிகளில் சென்று மாணவர்கள் அறிந்து கொள்ளலாம்.

மேலும் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமும், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள் மற்றும் அனைத்து மைய, கிளை நூலகங்களிலும் கட்டணம் இன்றி தேர்வு முடிவுகளை பார்த்துக் கொள்ளலாம். இதுதவிர பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் அவர்கள் பதிவுசெய்த செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வழியாகவும் அனுப்பி வைக்கப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel