Recent Post

6/recent/ticker-posts

வ.உ.சி., மூவலூர் ராமாமிர்தம், முத்துலட்சுமி ரெட்டி சிலைகள் - முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார் / VUC, Muvalur Ramamirtham, Muthulakshmi Reddy Statues - inaugurated by Chief Minister Stalin

  • செய்தித் துறை சார்பில் கோயம்புத்தூர் வ.உ.சி. பூங்காவில் வ.உ.சிதம்பரனார், மயிலாடுதுறையில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு ரூ.66 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளை முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார். 
  • ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ஈஸ்வரன், நாமக்கல்லில் சென்னை மாகாண முன்னாள் முதல்வர் ப.சுப்பராயன் ஆகியோருக்கு ரூ.5.10 கோடியில் புதிதாக அமைக்கப்பட உள்ள உருவ சிலையுடன் கூடிய அரங்கங்களுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
  • இந்து சமய அறநிலையத் துறைசார்பில், ஆணையர் அலுவலக கூடுதல் கட்டிடம் ரூ.15 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இக்கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். ஒப்பந்த காலத்துக்கு 6 மாதம் முன்னதாக இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இது 3 தளங்களுடன், 33,202 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
  • திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.13.80கோடியில் அனைத்து வசதிகளுடன் பக்தர்கள் வரிசை வளாகமும், விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் கிருபாபுரீஸ்வரர் கோயிலில் ரூ.1.63 கோடியில் திருமண மண்டபமும் கட்டப்பட்டுள்ளன. இவற்றையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel