Recent Post

6/recent/ticker-posts

உலகின் செலவுமிக்க நகரங்களின் பட்டியல் 2023 / LIST OF WORLD MOST EXPENSIVE CITIES 2023

TAMIL

  • 2023-ஆம் ஆண்டுக்கான உலகின் செலவுமிக்க (Most Expensive Cities) நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், 20 நகரங்கள் இடம்பெற்றுள்ளது. 
  • அதன்படி, 2023 ஆம் ஆண்டில் வெளிநாட்டினருக்கான உலகின் மிகவும் செலவுமிக்க நகரங்களின் பட்டியலில் அமெரிக்காவின் நியூயார்க் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகரிப்பு, கட்டட வாடகை அதிகரித்து வருவதே நியூயார்க் செலவுமிக்க நகரமாக ஆக காரணம்.
  • உலகின் செலவுமிக்க நகரங்கள் பட்டியலில் இதுவரை முதலிடத்தில் இருந்த ஹாங்ஹாங் இந்தாண்டு இரண்டாவது இடத்துக்கு சென்றுள்ளது. இதுபோன்று, சுவிட்சர்லாந்தின் ஜெனிவா மூன்றாவது இடம், லண்டன் நான்காவது, சிங்கப்பூர் ஐந்தாவது என முதல் 5 இடங்களுக்குள் உள்ளன.
  • கடந்த ஆண்டு 13வது இடத்தில் இருந்த சிங்கப்பூர் முதல் முறையாக முதல் 5 இடங்களுக்குள் முன்னேறியது. இதன்பின் ஜூரிச், சான் பிரான்சிஸ்கோ, இஸ்ரேல் தலைநகர் டெல் அவிவ், சியோல், டோக்கியோ ஆகியவை அதிக செலவுமிக்க நகரங்களில் முதல் 10 இடங்களில் உள்ளன. 
  • இதனைத்தொடர்ந்து, சுவிட்சர்லாந்து பெர்ன், துபாய் UAE, ஷாங்காய் சீனா, குவாங்சூ சீனா, லாஸ் ஏஞ்சல்ஸ் அமெரிக்கா, ஷென்சென் சீனா, பெய்ஜிங் சீனா, கோபன்ஹேகன் டென்மார்க், அபுதாபி UAE, சிகாகோ அமெரிக்கா ஆகிய நகரங்கள் முதல் 20 இடங்களில் உள்ளன.
  • இந்த பட்டியலில் அமெரிக்கா மற்றும் சீனாவில் உள்ள நகரங்கள் ஆதிக்கம் செலுத்தியுள்ளன. அதே நேரத்தில் துபாய் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள அபுதாபி ஆகியவை இந்த ஆண்டு தரவரிசைப்படுத்தப்பட்ட மொத்த 20 நகரங்களில் ஒன்று குறைந்துள்ளது. 
  • ஆசியாவில், சீன நகரங்கள் மற்றும் சிங்கப்பூர் தவிர, ஜப்பானின் டோக்கியோ மற்றும் தென் கொரியாவின் தலைநகரான சியோல் ஆகியவை முதல் 10 பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும், உலகின் செலவுமிக்க முதல் 20 நகரங்களில் இந்தியாவின் எந்த நகரமும் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ENGLISH

  • The list of the world's most expensive cities for the year 2023 has been released. It includes 20 cities. Accordingly, in 2023, New York has topped the list of the most expensive cities in the world for expats. New York is the most expensive city due to rising inflation and rising rents in the United States.
  • Hong Kong, which was the most expensive city in the world until now, has moved to the second place this year. Thus, Switzerland's Geneva is third, London is fourth and Singapore is fifth in the top 5.
  • Singapore moved into the top 5 for the first time from 13th place last year. This is followed by Zurich, San Francisco, Israeli capital Tel Aviv, Seoul and Tokyo in the top 10 most expensive cities. 
  • Following this, Switzerland Bern, Dubai UAE, Shanghai China, Guangzhou China, Los Angeles USA, Shenzhen China, Beijing China, Copenhagen Denmark, Abu Dhabi UAE, Chicago USA are in the top 20 cities.
  • The list is dominated by cities in the US and China. At the same time Dubai and Abu Dhabi in the United Arab Emirates fell one out of a total of 20 cities ranked this year. 
  • In Asia, apart from Chinese cities and Singapore, Japan's Tokyo and South Korea's capital Seoul feature in the top 10 list. Also, it is noteworthy that no city in India has been included in the top 20 most expensive cities in the world.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel