Recent Post

6/recent/ticker-posts

உலக உணவு இந்தியா மாநாடு 2023 / WORLD FOOD INDIA CONFERENCE 2023

TAMIL

  • புதுதில்லியில் நடைபெறும் உலக உணவு இந்தியா மாநாட்டில் வெளிநாடுகள் பங்கேற்பது குறித்து இந்தியாவில் உள்ள அந்நாடுகளின் தூதர்களுடன் வட்டமேஜை கூட்டத்திற்கு உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை அமைச்சகம் ஏற்பாடு செய்திருந்தது. 
  • புதுதில்லியில் இரண்டாவது முறையாக நடைபெற உள்ள உலக உணவு இந்தியா 2023  மாநாடு நவம்பர் 3-ம் தேதி தொடங்கி 5-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 
  • சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில், இந்திய உணவுப் பதப்படுத்துதல் துறை இதற்கு ஏற்பாடு செய்திருந்தது. சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டு  2023-ன் ஒரு பகுதியாக இம்மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இக்கூட்டத்திற்கு உணவுப் பதப்படுத்துதல் செயலாளர் திருமதி  அனிதா பிரவின், வெளியுறவு அமைச்சக சிறப்பு செயலாளர் திரு பிரபத் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர். வெளிநாடுகளின் தூதர்கள், துணைத்தூதர்கள், இதர உயர் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  • உலகளாவிய உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வதில் இந்தியாவின் தனித்துவ பங்களிப்பு குறித்தும், பெருமளவிலான வளங்கள், நுகர்வோர்கள் ஆகியோர் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

ENGLISH

  • The Ministry of Food Processing Industries today organized a round table meeting with ambassadors of those countries in India regarding foreign participation in the World Food India Conference to be held in New Delhi. 
  • The World Food India 2023 Conference, which is to be held for the second time in New Delhi, is scheduled to start from November 3 to 5. It was organized by the Indian food processing industry to attract international investment. The conference is organized as part of the International Year of Small Grains 2023.
  • The meeting was presided over by Food Processing Secretary Mrs. Anita Pravin and Special Secretary, Ministry of External Affairs Mr. Prabhat Kumar. Foreign ambassadors, deputy ambassadors and other high representatives were present.
  • The meeting discussed India's unique contribution to ensuring global food security, its abundant resources and consumers.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel