Recent Post

6/recent/ticker-posts

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves 4G/5G spectrum allocation to BSNL

  • புனரமைப்பு உத்தியின் ஒரு பகுதியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு ரூ.89,047 கோடி ஒதுக்கீட்டுடன் 3-வது புனரமைப்புத் திட்டத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. சமபங்கு அளிப்பதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4ஜி/5ஜி அலைக்கற்றை ஒதுக்கீடும் இதில் அடங்கும்.
  • இதற்காக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனம் ரூ.1,50,000 கோடியிலிருந்து ரூ.2,10,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
  • இந்த புதுப்பிக்கப்பட்ட நிதியுதவித் திட்டத்தின் மூலம் நாட்டின் தொலை தூரப் பகுதிகளுக்கும் தொடர்பு வசதி வழங்குவதை நோக்கமாகக் கொண்ட நிலையான தொலைத்தகவல் சேவை நிறுவனமாக பிஎஸ்என்எல் வளர்ச்சி பெறும்.


Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel