Recent Post

6/recent/ticker-posts

ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 70ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணை: பிரதமர் மோடி வழங்கினார் / 70,000 people under Rojkar Mela scheme: PM Modi issued appointment orders

  • ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நடைபெற்றது. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டார். தொடர்ந்து பணிநியமன ஆணைகளை அவர் வழங்கினார்.
  • நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளிலிலிருந்து அரசுப் பணிகளுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள், நிதிச்சேவைகள் துறை, அஞ்சல்துறை, பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, பாதுகாப்பு அமைச்சகம், வருவாய்த்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம், அணுசக்தித்துறை, ரயில்வே அமைச்சகம், கணக்கு மற்றும் தணிக்கைத்துறை, உள்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணியாற்ற உள்ளனர். 
  • இந்த வேலைவாய்ப்புத் திருவிழா நாடு முழுவதும் 43 இடங்களில் நடைபெற்றது. மத்திய அரசின் துறைகள், மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளின் துறைகளில் இந்த நியமனங்கள் செய்யப்பட்டுள்ளன

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel