Recent Post

6/recent/ticker-posts

ஐநா தலைமையகத்தில் நடந்த 9வது சர்வதேச யோகா தின விழா 2023 / 9th International Yoga Day Festival 2023 at UN Headquarters

  • அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் அழைப்பை ஏற்று, 4 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி அமெரிக்கா சென்றார். 
  • இந்த முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தின் 2ம் நாளின் முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் 9வது சர்வதேச யோகா தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். 
  • ஐநா தலைமையகத்தின் வடக்கு புல்வெளியில் நூற்றுக்கணக்கானோர் யோகா செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 6 மணி முதலே ஏராளமான இந்திய வம்சாவளிகள், அமெரிக்கர்கள் யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க வரிசையில் காத்திருந்தனர். 
  • வெள்ளை நிற யோகா டிஷர்ட் மற்றும் வெள்ளை நிற பேன்ட் அணிந்து, ஐநா தலைமையகத்திற்கு வந்த பிரதமர் மோடி அங்கு அமைக்கப்பட்டுள்ள மகாத்மா காந்தி மார்பளவு சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
  • அதைத் தொடர்ந்து காலை 7 மணிக்கு சர்வதேச யோகா நிகழ்ச்சி தொடங்கியது. இதில் பிரதமர் மோடி தலைமையில் 180 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் யோகா செய்தனர். 
  • இதில், ஐநா சபையின் 77வது கூட்டத் தொடரின் தலைவர் சபா கொரோசி, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரே, நியூயார்க் நகர மேயர் எரிக் ஆடம்ஸ், ஐக்கிய நாடுகள் சபையின் துணைப் பொதுச்செயலாளர் அமினா ஜே முகமது உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
  • புல்வெளியில் இந்திய கலாசாரம் மற்றும் பாரம்பரிய வீடியோக்களை ஒளிபரப்பும் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டிருந்தன. யோகா நிகழ்வை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, 'நமஸ்தே' என அனைவருக்கும் வணக்கம் தெரிவித்து தனது உரையை தொடங்கினார். 
  • ஐநா தலைமையகத்தில் நடந்த பிரதமர் மோடி தலைமையிலான யோகா கொண்டாட்டத்தில் அதிக நாடுகளைச் சேர்ந்த மக்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். இதற்காக பிரதமர் மோடியிடம் கின்னஸ் சான்றிதழ் வழங்கப்பட்டது.
  • சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட்டு 9 ஆண்டுகளுக்குப் பிறகு ஐநாவில் நடைபெறும் யோகா நிகழ்வுக்கு பிரதமர் மோடி தலைமை ஏற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel