2021 ஆம் ஆண்டு மே மாதம் தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வி இயக்குநர் என்ற பதவி ரத்து செய்யப்பட்டது. இனி அந்தப் பணிக்கான பொறுப்புகளை பள்ளிக்கல்வி ஆணையரே கையாள்வார் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த முடிவை தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்த்தனர். இது நிர்வாக சீர்திருத்தம் என்ற பெயரில் அரசு எடுத்துள்ள இந்த முடிவு நிர்வாக சீர்குலைவையே ஏற்படுத்தும் என்றும் விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் பதவி மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டு, அதன் இயக்குநராக முனைவர் அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடக்கக் கல்வித் துறை இயக்குனராக கண்ணப்பன் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக முனைவர் ராமேஸ்வர முருகன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கக இயக்குனராக பழனிசாமி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக உறுப்பினர் செயலாளராக குப்புசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments