Recent Post

6/recent/ticker-posts

இந்தியா - எகிப்து இடையே ஒப்பந்தங்கள் கையெழுத்து / MOU BETWEEN INDIA & EQYPT

TAMIL

  • அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி எகிப்து சென்றுள்ளார். அங்கு, மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க பிராந்தியத்தில் இயங்கி வரும் மிகப்பெரிய எகிப்திய நிறுவனங்களில் ஒன்றான ஹாசன் ஆலம் ஹோல்டிங் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி முகமது மேதத் ஹசன் அலாம், பெட்ரோலியம் மூலோபாய நிபுணருமான தரீக் ஹெஜ்ஜி ஆகியோரை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
  • அதன் தொடர்ச்சியாக, எகிப்து தலைநகர் கெய்ரோவில் அந்நாட்டு அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி-யை பிரதமர் மோடி சந்தித்தார். அப்போது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
  • அத்துடன், பிரதமர் மோடி, எகிப்து அதிபர் அப்தெல் பத்தா எல் சிசி முன்னிலையில், இந்தியா - எகிப்து இடையே பல்வேறு துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. 
  • இருதரப்பு உறவை "மூலோபாய கூட்டாண்மைக்கு" உயர்த்துவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயம், தொல்லியல், சட்டம் மற்றும் தொல்பொருட்கள் ஆகிய துறைகளில் மூன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளன.

ENGLISH

  • Prime Minister Modi has gone to Egypt after completing his US visit. There, Prime Minister Modi held talks with CEO of Hassan Alam Holding Company, one of the largest Egyptian companies operating in the Middle East and North Africa region, Mohammed Medhat Hassan Alam, and Petroleum Strategist Tariq Hejji.
  • Following this, Prime Minister Modi met President Abdel Fattah el-Sisi in Cairo, the capital of Egypt. There was a detailed discussion on strengthening bilateral relations.
  • Also, in the presence of Prime Minister Modi and Egyptian President Abdel Fattah El Sisi, MoUs were signed between India and Egypt in various fields.
  • An agreement has reportedly been signed to elevate the bilateral relationship to a "strategic partnership". Also, three MoUs were signed in the fields of agriculture, archaeology, law and antiquities.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel