- நேரு நினைவு அருங்காட்சியகம் மற்றும் நூலக சங்கத்தின் சிறப்புக் கூட்டத்தில் இதன் பெயரை பிரதமரின் அருங்காட்சியகம் மற்றும் நூலகச் சங்கம் எனப் பெயர் மாற்றம் செய்ய தீர்மானிக்கப்பட்டது. இந்த சிறப்புக் கூட்டத்திற்கு பாதுகாப்பு அமைச்சரும், சங்கத்தின் துணைத்தலைவருமான திரு ராஜ்நாத் சிங் தலைமை வகித்தார்.
- இந்தியாவின் அனைத்து பிரதமர்களுக்கும் அர்ப்பணிக்கும் வகையில் புதுதில்லியில் உள்ள தீன் மூர்த்தி வளாகத்தில் அனைத்து பிரதமர்களின் அருங்காட்சியகம் அமைக்க வேண்டும் என்ற யோசனையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்தார். இதனை அடிப்படையில் கட்டப்பட்ட பிரதமர்களின் அருங்காட்சியகம் 2022, ஏப்ரல் 21 அன்று பொதுமக்கள் பார்வையிட திறக்கப்பட்டது.
0 Comments