கூட்டுறவுத் துறை சார்பில் உலகின் மிகப்பெரிய உணவு தானிய சேமிப்புத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை (ஐ.எம்.சி) ஏற்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves constitution of Inter-Ministerial Committee (IMC) to implement World's Largest Food Grain Storage Scheme under Cooperative Sector
வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், நுகர்வோர் விவகாரங்கள் அமைச்சகம், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகம் ஆகியவற்றின் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து செயல்படுத்தி அதன் மூலமாக கூட்டுறவுத் துறை சார்பில் உலகின் மிகப்பெரிய தானிய சேமிப்பு முறைத் திட்டத்தை எளிதில் செயல்படுத்துவதற்காக அமைச்சகங்களுக்கு இடையிலான குழுவை (ஐ.எம்.சி) அமைப்பதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் இன்று (31-05-2023) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொழில்முறையில் இத்திட்டத்தை குறித்த காலத்திலும், சீரான முறையிலும் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக, கூட்டுறவு அமைச்சகம், நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டங்களில் முன்னோடி திட்டத்தை செயல்படுத்தும்.
குறைந்தது 10 மாவட்டங்களில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்கட்டமாக தொடக்கத்தில் இத்திட்டத்திலிருந்து பெறப்படும் அனுபவங்களின் மூலமாக, நாடு தழுவிய அளவில் இத்திட்டத்தை விரிவாக செயல்படுத்துவதற்கான நடைமுறைகள் உருவாக்கப்படும்.
0 Comments