நாடு முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பை அமல்படுத்தும் வகையில், கடந்த 2017ல் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கொண்டு வரப்பட்டது.
அதிலிருந்து, ஒவ்வொரு மாத ஜிஎஸ்டி வசூல் குறித்து ஒன்றிய நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டு வருகிறது. 'ஜூன் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சத்து 61 ஆயிரத்து 497 கோடி.
இதில் ஒன்றிய ஜிஎஸ்டி ரூ.31,013 கோடி. மாநில ஜிஎஸ்டி வசூல் ரூ.38,292 கோடி. ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.80,292 கோடி. செஸ் வரி ரூ.11,900 கோடி. கடந்த ஆண்டு இதே மாதத்தை விட இம்முறை 12 சதவீதம் அதிகமாக வரி வசூலாகி உள்ளது.
ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டதில் இருந்து 4வது முறையாக வசூல் ரூ.1.60 லட்சம் கோடியை தாண்டி உள்ளது' என கூறப்பட்டுள்ளது. இதுவரை அதிகபட்சமாக கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1.87 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலானது. கடந்த மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.57 லட்சம் கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments