Recent Post

6/recent/ticker-posts

அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் - கோவா சாலஞ்சர்ஸ் சாம்பியன் பட்டம் / Ultimate Table Tennis Season 4 Tournament - Goa Challengers Champion


  • இந்தியன் ஆயில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 4 போட்டிகள் புனேவில் உள்ள ஷிவ்சத்ரபதி விளையாட்டு வளாகத்தில் நடைபெற்று வந்தன. இதன் இறுதிப் போட்டியில் சென்னை லயன்ஸ் - கோவா சாலஞ்சர்ஸ் அணிகள் மோதின.
  • முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் பெனடிக் டூடா, கோவா அணியின் ஹர்மீத் தேசாயை எதிர்த்து விளையாடினார். இதில் உலகத் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள டூடாவை 1-2 (11-6, 4-11, 8-11) என்ற செட் கணக்கில் வீழ்த்தினார் ஹர்மீத் தேசாய்.
  • 2-வதாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவில் சென்னையின் யாங்ஸி லியு, கோவாவின் சுதாசினியுடன் மோதினார். இதில் யாங்ஸி லியு 2-1 (7-11, 11-6, 11-5) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். 
  • 3-வதாக நடைபெற்ற கலப்பு இரட்டையர் பிரிவில் சென்னையின் ஷரத் கமல், யாங்ஸி லியு ஜோடி கோவாவின் ஹர்மீத் தேசாய், சுதாசினி ஜோடியை எதிர்கொண்டது. இதில் ஷரத் கமல், யாங்ஸி லியு ஜோடி 2-1 (11-7,11-9,10-11) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.  
  • 4-வதாக நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் ஷரத் கமல், உலகத் தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ள கோவாவின் ஆல்வரோ ரோபிள்ஸுடன் பலப்பரீட்சை நடத்தினார்.
  • இதில் 32-வது இடத்தில் உள்ள ஷரத் கமல் 0-3 (8-11, 8-11, 10-11)என்ற கணக்கில் தோல்வி அடைந்தார். ஆல்வரோபிள்ஸின் வெற்றியால் கோவா அணி 7-5 என முன்னிலை வகித்தது.
  • கடைசியாக நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சென்னை அணியின் சுதிர்தா முகர்ஜி, கோவா அணியின் ரீத் ரிஷ்யாவை எதிர்கொண்டார். ரீத் ரிஷ்யா 11-6 என சுதிர்தா முகர்ஜியை தோற்கடிக்க கோவா சாலஞ்சர்ஸ் அணி 8-7 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel