Recent Post

6/recent/ticker-posts

தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் சுமார் ரூ. 6,100 கோடி மதிப்பிலான உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் / In Warangal, Telangana Prime Minister laid foundation stone for infrastructure development projects worth 6,100 crores

  • தெலுங்கானா மாநிலத்தில் சுமார் ரூ 6,100 கோடி மதிப்பிலான பல முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாரங்கலில் அடிக்கல் நாட்டினார். 
  • ரூ 5,550 கோடி மதிப்பிலான 176 கிமீ நீள தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களும், காசிப்பேட்டையில் ரயில்வே உற்பத்தி அலகும் ரூ 500 கோடி செலவில் உருவாக்கப்படும். பத்ரகாளி கோயிலில் பிரதமர் தரிசனம் மற்றும் பூஜையும் செய்தார்.
  • ரூ 5,550 கோடி மதிப்பிலான 176 கிமீ நீள தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். திட்டங்களில் 108 கிமீ நீளமுள்ள மஞ்சேரியல் - வாரங்கல் பகுதி நாக்பூர் - விஜயவாடா வழித்தடத்தில் அடங்கும். 
  • இந்தப் பிரிவானது மஞ்சேரியலுக்கும் வாரங்கலுக்கும் இடையிலான தூரத்தை சுமார் 34 கிமீ குறைக்கும், இதனால் பயண நேரம் குறைகிறது 68 கிமீ நீளமுள்ள கரீம்நகர் - வாரங்கல் பிரிவை தற்போதுள்ள இருவழிப்பாதையில் இருந்து நான்கு வழிச்சாலை அமைப்பாக மேம்படுத்துவதற்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.
  • இது ஹைதராபாத்-வாரங்கல் தொழில் வழித்தடம், காகதியா மெகா ஜவுளி பூங்கா, வாரங்கல் சிறப்பு பொருளாதார மண்டலம் ஆகியவற்றுக்கான இணைப்பை மேம்படுத்த உதவும்.
  • காசிப்பேட்டையில் உள்ள ரயில்வே உற்பத்திப் பிரிவுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார். ரூ 500 கோடி செலவில் உருவாக்கப்படும், நவீன உற்பத்தி அலகு ரோலிங் ஸ்டாக் உற்பத்தி திறனை மேம்படுத்தும். வேகன்களின் ரோபோடிக் பெயிண்டிங், அதிநவீன இயந்திரங்கள் மற்றும் நவீன பொருள் சேமிப்பு மற்றும் கையாளுதலுடன் கூடிய ஆலை போன்ற சமீபத்திய தொழில்நுட்ப தரநிலைகள் மற்றும் வசதிகளுடன் இது பொருத்தப்பட்டிருக்கும். இது உள்ளூர் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் துணை அலகுகளின் வளர்ச்சிக்கு உதவும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel