உச்ச நீதிமன்றத்துக்கு, மே 22ம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது.இந்த விடுமுறை காலத்தில், 2,000க்கும் மேற்பட்ட வழக்குகளை கோடை விடுமுறை கால சிறப்பு அமர்வுகள் விசாரித்தன.
அப்போது, 700 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இந்த விடுமுறை காலத்தில் மூன்று நீதிபதிகள் ஓய்வு பெற்றனர். இந்நிலையில், 42 நாட்களுக்குப் பின் உச்ச நீதிமன்றம் நேற்று முதல் வழக்கம் போல் மீண்டும் செயல்படத் துவங்கியது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் ஐந்து அறைகளுக்கு வை - பை வசதி வழங்கப்பட்டுள்ளது.
ஒன்று முதல் ஐந்து வரையிலான நீதிமன்ற அறைகளில் வை - பை வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இனி இந்த நீதிமன்ற அறைகளில் சட்ட புத்தகங்கள், ஆவணங்கள் இருக்காது.
மின்னணு நடவடிக்கை வாயிலாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த வசதியை, உச்ச நீதிமன்றத்துக்கு வரும் வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், வளாகத்துக்கு வருகை தருபவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
0 Comments