Recent Post

6/recent/ticker-posts

இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது / India Meteorological Department has introduced heat index

  • இந்திய வானிலை ஆய்வு மையம் சமீபத்தில் சோதனை அடிப்படையில் வெப்ப குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய புவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்தார். 
  • வெளிப்படையான வெப்பநிலை / உணரும் வெப்பநிலை (வெப்பநிலையுடன் ஈரப்பதத்தின் தாக்கத்தை கருத்தில் கொண்டு) மக்களுக்கு இடர்பாடுகளை ஏற்படுத்தும் பிராந்தியங்களுக்கு பொதுவான வழிகாட்டலை வழங்குவதற்காக சோதனை வெப்ப குறியீட்டை இந்திய வானிலை ஆய்வு மையம் தொடங்கியுள்ளது என்று அவர் கூறினார். 
  • தற்போது, அமெரிக்காவின் தேசிய வானிலை சேவை, தேசிய பெருங்கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் பயன்படுத்துவதைப் போன்ற வெப்ப குறியீட்டு சமன்பாட்டைப் பயன்படுத்தி வெப்பக் குறியீட்டெண் பெறப்படுகிறது.
  • சோதனை வெப்பக் குறியீட்டிற்குப் பயன்படுத்தப்படும் வண்ணக் குறியீடுகள் பின்வருமாறு:
  • பச்சை:- சோதனை வெப்ப குறியீட்டெண் 35 டிகிரி செல்சியஸுக்கும் குறைவாக உள்ளது
  • மஞ்சள்:- சோதனை வெப்பக் குறியீடு 36-45 டிகிரி செல்சியஸ் வரம்பில்
  • ஆரஞ்சு:- சோதனை வெப்ப குறியீட்டெண் 46-55 டிகிரி செல்சியஸ் வரம்பில்
  • சிவப்பு:- சோதனை வெப்ப குறியீட்டெண் 55 டிகிரி செல்சியஸை விட அதிகமாக உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel