Recent Post

6/recent/ticker-posts

மணற்கேணி செயலி / MANARKENI APP

TAMIL

மணற்கேணி செயலி / MANARKENI APP: இந்தியாவில் முதல்முறையாக, பள்ளி மாணவர்களுக்கான பாடங்களை காணொலி வடிவில் வழங்கும் செயலியை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலியின் வெளியீட்டு விழா நடைபெறுகிறது.

தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும், மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் 1 முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான மாணவர்கள் இதில் பயன்பெற இருக்கின்றனர். 

1 முதல் 12 வகுப்புகளுக்குமான பாடங்களை 27 ஆயிரம் கருப்பொருட்களாக, வகுப்புகள் தாண்டி வகை பிரித்து, அதற்கேற்றபடி காணொலி வாயிலான விளக்கப் பாடங்கள் இதில் அடங்கியுள்ளன.

நாட்டிலேயே முதன்முதலாக ஒரு மாநில அரசு தன்னிடமுள்ள வல்லுநர்களைக் கொண்டு உருவாக்கி உள்ள செயலியாகவும் பள்ளிக் கல்வித்துறை இதனை முன்னிலைப்படுத்துகிறது. 

இந்த மணற்கேணி செயலியை பயன்படுத்தி ஆசிரியர்கள், அதிலுள்ள பாடப்பொருட்களின் துணைகொண்டு மாணவர்களுக்கு எளிமையாகப் புரியும்படி பாடங்களை நடத்தலாம். இந்த முன்னெடுப்பின் மூலம் சுமார் 25 லட்சம் மாணவ மாணவியர் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ENGLISH

மணற்கேணி செயலி / MANARKENI APP: For the first time in India, the Tamil Nadu government is launching an app that provides video lessons for school students. The launch of this app is taking place. Students from class 1 to plus 2 studying in the state curriculum in both Tamil and English are eligible.

It contains 27,000 subjects for classes 1 to 12, cross-category, and audio-visual explanations accordingly. The school education department also highlights this as the first program in the country developed by a state government with its own experts.

By using this app, teachers can conduct lessons in a way that is easy for students to understand with the help of the course materials. Around 25 lakh students are expected to benefit from this initiative.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel