Recent Post

6/recent/ticker-posts

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி - ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு / 28% GST on online games - Union Minister Nirmala Sitharaman announced

  • டெல்லியில் 51வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் தொடங்கியது. காணொலி வாயிலாக நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில அரசுகளின் சார்பில் நிதி அமைச்சகத்தின் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 
  • இந்த கூட்டத்தில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. 
  • இறுதியில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி அமல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். 
  • இதற்காக ஒன்றிய மற்றும் மாநில சட்டங்களில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்ட பிறகு, புதிய வரி விதிப்பு அக்டோபர் 1 முதல் அமலுக்கு வரும். இந்த வரி விதிப்பு நடைமுறைக்கு வந்த 6 மாதங்களுக்குப் பிறகு மறுஆய்வு செய்யப்படும். 

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel