- இந்தியாவில் 450க்கும் அதிகமான பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தைச் சேர்ந்த 58 பொருட்களுக்கு தற்போது வரை புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- அதன் அடிப்படையில் நாட்டிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்ற மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மேலும் 3 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.
- அதன்படி திருவாண்ணாமலை மாவட்டம் ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டி, தஞ்சை, வீரமாங்குடி செடி புட்டா சேலை, கன்னியாகுமரி மட்டி வாழைப் பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
- தமிழகத்தில் தற்போது வரை 58 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ள நிலையில், மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்று தற்போது வரை 17 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments