Recent Post

6/recent/ticker-posts

உங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருக்கா முதலில் இதை செய்யுங்க / HOW TO RECTIFY ERROR IN SSLC CERTIFICATE IN TAMILNADU 2023

உங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருக்கா முதலில் இதை செய்யுங்க / HOW TO RECTIFY ERROR IN SSLC CERTIFICATE IN TAMILNADU 2023

உங்கள் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் பிழை இருக்கா முதலில் இதை செய்யுங்க / HOW TO RECTIFY ERROR IN SSLC CERTIFICATE IN TAMILNADU 2023: தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடப்பு ஆண்டில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும் நடைபெற்றது.

பிறகு ஆகஸ்ட் 18ஆம் தேதி முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிலையில், அந்த மதிப்பெண் சான்றிதழ்களில் பெயர், பிறந்த தேதி ஆகியவற்றில் ஏதேனும் பிழை இருந்தால் அந்த பிழையை மாற்றம் செய்து கொள்ள தேர்வுத்துறை இயக்குனரகம் வாய்ப்பு வழங்கியுள்ளது. 

அதாவது, பத்தாம் வகுப்பு சான்றிதழ் உயர்கல்வி பயில மிக முக்கியமான ஆவணமாக இருந்து வருவதனால் பிழை இருந்தால் மாணவர்கள் திருத்தம் செய்து கொள்ள அறிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பிழை இருக்கும் மாணவர்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்று சான்றிதழை சேர்த்து பள்ளி தலைமை ஆசிரியரிடம் செப்டம்பர் 8 ஆம் தேதிக்குள் ஒப்படைக்கலாம். 

இதன் பின்னர், அசல் மதிப்பெண் சான்றிதழ் விவரங்களை www.dge.tn.gov.in என்கிற இணையதள பக்கத்தில் செப்டம்பர் 22ஆம் தேதிக்குள் பள்ளி ஆசிரியர்கள் பதிவேற்றம் செய்திருக்க வேண்டும். 

மேலும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாணவர்களிடமிருந்து பெறப்பட்ட அசல் சான்றிதழ்களை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel