Recent Post

6/recent/ticker-posts

தூய்மையான மற்றும் பாதுகாப்பான டிஜிட்டல் சூழல் அமைப்பை மேம்படுத்த மொபைல் பயன்படுத்துவோர் பாதுகாப்பிற்காக இரண்டு சீர்திருத்தங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன / Two reforms have been introduced for the protection of mobile users to promote a clean and secure digital ecosystem

  • பாதுகாப்பு மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பின் மிக உயர்ந்த தரங்களைப் பராமரிக்கும் அதே நேரத்தில் அனைவரையும் உள்ளடக்கிய டிஜிட்டல் சமூகத்தை ஊக்குவிப்பதற்கான மத்திய அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் வகையில், தொலைத்தொடர்பு, ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ், டிஜிட்டல் மாற்றம் மற்றும் வாடிக்கையாளர் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான இரண்டு சீர்திருத்தங்களை (கேஒய்சி சீர்திருத்தங்கள், விற்பனைப் புள்ளி (பிஓஎஸ்), பதிவு சீர்திருத்தம்) இன்று அறிமுகம் செய்தார்
  • பாயிண்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) பதிவு சீர்திருத்தங்கள்-இந்தச் சீர்திருத்தம் உரிமதாரர்கள், முகவர்கள் மற்றும் விநியோகஸ்தர்களை (பிஓஎஸ்) கட்டாயமாகப் பதிவு செய்வதற்கான செயல்முறையை அறிமுகப்படுத்துகிறது. மோசடி நடைமுறைகள் மூலம் சமூக விரோத / தேச விரோத சக்திகளுக்கு சிம்களை வழங்கும் பி.ஓ.எஸ்ஸை அகற்ற இது உதவும்.
  • கேஒய்சி சீர்திருத்தங்கள் -கேஒய்சி என்பது ஒரு வாடிக்கையாளரை தனித்துவமாக அடையாளம் காணும், ஒரு செயல்முறையாகும். அச்சிடப்பட்ட ஆதார் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, அச்சிடப்பட்ட ஆதாரின் க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் மக்கள்தொகை விவரங்கள் கட்டாயமாக பெறப்படும். மொபைல் எண் துண்டிக்கப்பட்டால், அது 90 நாட்களில் காலாவதியாகும் வரை வேறு எந்த புதிய வாடிக்கையாளருக்கும் ஒதுக்கப்படாது. ஒரு சந்தாதாரர் தனது சிம் மாற்றுவதற்கு முழுமையான கேஒய்சி- ஐ மேற்கொள்ள வேண்டும், மேலும் வெளிச்செல்லும் மற்றும் உள்வரும் எஸ்எம்எஸ் வசதிகளுக்கு 24 மணி நேர தடை இருக்கும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel