Recent Post

6/recent/ticker-posts

கீழடி அகழாய்வு - முதுமக்கள் தாழியில் கிடைத்த சிவப்பு மணிகள் / Keezhadi Excavation - Red beads found in old man's talisman

கீழடி அகழாய்வு - முதுமக்கள் தாழியில் கிடைத்த சிவப்பு மணிகள் / Keezhadi Excavation - Red beads found in old man's talisman
  • சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் மத்திய, மாநில அரசுகளின் மூலம் ஏற்கனவே எட்டு கட்டங்களாக தொல்லியல் அகழாய்வு நடத்தப்பட்டு பல்லாயிரக்கணக்கான பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது.
  • அவற்றில் பெரும்பாலானவை கீழடி அருங்காட்சியகத்தில் மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், கீழடி மற்றும் அதன் அருகே உள்ள கொந்தகை, அகரம் உள்ளிட்ட இடங்களில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு தீவிரமாக நடைபெற்று வருகிறது.
  • இதிலும், ஏராளமான பொருட்கள், அகழாய்வு குழிகளை தோண்டும்போது கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஒன்பதாம் கட்ட அகழாய்வின் போது கார்னிலியன் கல் வகையை சார்ந்த இரண்டு உயர்வகை சிவப்பு கல்மணிகள் முதுமக்கள் தாழிக்குள் கண்டறியப்பட்டுள்ளது.
  • தற்போது, கண்டுபிடிக்கப்பட்ட மணியானது அலை, அலையான வரி வடிவத்துடன் வேலைப்பாடுகளுடன் கிடைத்துள்ளது. இந்த மணியின் நீளம் 1.4 செ.மீ., மற்றும் அதன் விட்டம் 2 செ.மீ. ஆக உள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel