குஜராத்தில் அகில இந்திய வானொலி (ஆகாஷ்வாணி) தஹோட் பண்பலை ஒலிபரப்பு நிலையத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டினார்.
மாநிலத்தின் போடேலியில் நடந்த நிகழ்ச்சியில் 10 கிலோவாட் திறன் கொண்ட பண்பலை ஒலிபரப்பு நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் காணொலிக் காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.
இந்த நிலையம் ரூ.11.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது. இது சுமார் 55 கி.மீ சுற்றளவில் உள்ள உள்ளூர் வாசிகளை சென்றடையும். இது பழங்குடி மாவட்டமான தஹோட்டின் சுமார் 75% பகுதியை உள்ளடக்கியது.
மேலும், அலிராஜ்பூர் மற்றும் ஜாபுவா உள்ளிட்ட மத்தியப் பிரதேசத்தின் அண்டை பழங்குடி மாவட்டங்களையும் இந்த அலைவரிசையின் ஒலிபரப்பு சென்றடையும்.
0 Comments