Recent Post

6/recent/ticker-posts

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி - 14வது & கடைசி நாள் / 19TH ASIAN GAMES - 14TH & FINAL DAY RESULT

 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி - 14வது & கடைசி நாள் / 19TH ASIAN GAMES - 14TH & FINAL DAY RESULT

  • 19வது ஆசிய விளையாட்டுப் போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் தற்போது நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றறனர். 
  • ஒவ்வொரு நாளும் இந்தியா வீரர்கள் பதக்கங்களை குவித்தனர். செஸ்செஸ் போட்டியில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.வில்வித்தைஆசிய விளையாட்டு வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியா தங்கம் வென்றுள்ளது.
  • TO KNOW MORE ABOUT - WEBTOON PROMO CODES
  • தென்கொரிய வீராங்கனையை 149- 145 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி ஜோதி தங்கப் பதக்கம் வென்றார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீராங்கனை ஜோதி சுரேகா இதுவரை 3 தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • வில்வித்தை போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை அதிதி சுவாமி வெண்கலம் வென்றார். 
  • ஆடவர் ஒற்றையர் பிரிவு ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்திய வில்வித்தை வீரர்கள் ஓஜாஸ் பிரவீன் தங்கமும், அபிஷேக் வர்மா வெள்ளிப் பதக்கமும் வென்றனர். 
  • மகளிர் கபடிப் போட்டிமகளிர் கபடிப் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. சீன தைபே அணியை 26-24 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்திய மகளிள் கபடி அணி தங்கம் வென்றது.
  • ஆசிய விளையாட்டுப் போட்டியில் பாட்மின்டன் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது.
  • இந்திய இணை சாத்விக், சிராக் ஆகியோர் தங்கம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளனர்.
  • டி20 கிரிக்கெட் ஆசிய விளையாட்டு ஆண்கள் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது. மழையால் ஆப்கானிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டி ரத்தான நிலையில், சர்வதேச வரிசையில் முன்னிலையில் இருப்பதால் இந்திய அணி தங்கம் வென்றதாக அறிவிக்கப்பட்டது.
  • ஆடவர் கபடி போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் கிடைத்துள்ளது. இறுதிப்போட்டியில் ஈரான் அணியை 33-29 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி இந்திய அணி தங்கம் வென்றது.
  • சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா சாதனை படைத்துள்ளது. இந்தியா பங்கேற்கும் போட்டிகள் நிறைவு பெற்றுள்ளது. இதுவரை இல்லாத அளவாக 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என 107 பதக்கங்களுடன் நிறைவு செய்துள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel