தென்கிழக்கு ஆசியாவிற்கான உலக சுகாதார அமைப்பின் பிராந்திய குழுவின் 76வதுஅமர்வில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று உரையாற்றினார்.
அவருடன் உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரியேசஸும் கலந்து கொண்டார்.தென்கிழக்கு ஆசியாவின் பிராந்தியக் குழுவின் 76வது அமர்வின் தலைவராக டாக்டர் மாண்டவியா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மாலத்தீவு, இலங்கை, நேபாளம், வங்கதேசம், இந்தோனேஷியா, பூட்டான் ஆகிய நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் மானஸ்வி குமார், மூத்த அரசு அதிகாரிகள் மற்றும் உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதிகள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
0 Comments