தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் சுமார் ரூ.8000 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் / The Prime Minister laid the foundation stone for projects worth around Rs.8000 crore in Nizamabad, Telangana and dedicated the completed projects to the country.
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் மின்சாரம், ரயில் மற்றும் சுகாதாரம் போன்ற முக்கிய துறைகளில் ரூ.8000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி நிறைவடைந்தப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
தேசிய அனல் மின் கழகத்தின் தெலங்கானா சூப்பர் அனல் மின் திட்டத்தின் முதல் கட்டத்தின் 800 மெகாவாட் அலகு, மனோகராபாத் மற்றும் சித்திபேட்டை இணைக்கும் புதிய ரயில் பாதை உள்ளிட்ட ரயில் திட்டங்கள் இதில் அடங்கும்.
தர்மாபாத் - மனோகராபாத் மற்றும் மகபூப்நகர் - கர்னூல் இடையே மின்மயமாக்கல் திட்டம். பிரதமரின்- ஆயுஷ்மான் பாரத் சுகாதார உள்கட்டமைப்பு இயக்கத்தின் கீழ் மாநிலம் முழுவதும் 20 அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
சித்திபேட் - செகந்திராபாத் - சித்திபேட் ரயில் சேவையையும் பிரதமர் திரு மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
0 Comments