2018 – 2021, 2021 - 2023 ஆகிய ஆண்டுகளில் ஆசிய - பசிஃபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனத்தின் தலைவராக இந்தியா ஏற்கனவே இரண்டு முறை பணியாற்றிய நிலையில், முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது இந்தியா தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்நிறுவனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
யுனெஸ்கோவின் ஆதரவின் கீழ் 1977-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஆசிய - பசிஃபிக் ஒலிபரப்பு மேம்பாட்டு நிறுவனம் தனித்துவமான பிராந்திய அரசுகளுக்கு இடையிலான அமைப்பாகும்.
TO KNOW MORE ABOUT - DUOLINGO PROMO CODE
இந்நிறுவனத்தின் 21-வது பொது மாநாடு மற்றும் தொடர்புடைய கூட்டங்கள் 2023 அதன் தலைவரும் பிரசார் பாரதி தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு கௌரவ் திவிவேதி தலைமையில் மொரீஷியஸின் போர்ட் லூயிஸில் 2023, அக்டோபர் 2 முதல் 4 வரை வெற்றிகரமாக நடைபெற்றது.
0 Comments