Recent Post

6/recent/ticker-posts

வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், இந்தியா மற்றும் பப்புவா நியூ கினியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves Memorandum of Understanding between India and Papua New Guinea to share successful digital solutions

  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியக் குடியரசின் மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், பப்புவா நியூகினியாவின் தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவற்றுக்கு இடையே கடந்த ஜூலை 28 –ம் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
  • டிஜிட்டல் மாற்றத்திற்கான மக்கள்தொகை அளவுகோலில் செயல்படுத்தப்பட்ட வெற்றிகரமான டிஜிட்டல் தீர்வுகளைப் பகிர்வதில் ஒத்துழைப்பது தொடர்பாக இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளின் டிஜிட்டல் உருமாற்ற முன்முயற்சிகளை செயல்படுத்துவதில் நெருக்கமான ஒத்துழைப்பு, டிஜிட்டல் தொழில்நுட்ப அடிப்படையிலான தீர்வுகள் ஆகியவற்றை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தரப்பினரும் கையொப்பமிட்ட நாளிலிருந்து நடைமுறைக்கு வரும். 3 ஆண்டுகளுக்கு இது நடைமுறையில் இருக்கும்.
  • டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (டிபிஐ) துறையில், அரசுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கிடையே இருதரப்பு ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்.
  • தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலை வாய்ப்புகளுக்கு வழிவகுக்கும் மேம்பட்ட ஒத்துழைப்பை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel