Recent Post

6/recent/ticker-posts

பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரமளிக்க லீன் கேம்பஸ் ஸ்டார்ட்அப்ஸ் (அறக்கட்டளை) & வெய்சி இந்தியா நிறுவனத்துடன் இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம், புரிந்துணர்வு ஒப்பந்தம் / Institute of Corporate Affairs of India, MoU with Lean Campus Startups (Foundation) & Vesey India to empower women entrepreneurs

இந்திய கார்ப்பரேட் விவகாரங்கள் நிறுவனம் (ஐஐசிஏ), லீன் கேம்பஸ் ஸ்டார்ட்அப்ஸ் (அறக்கட்டளை) & வெய்சி இந்தியா ஆகியவை குருகிராமின் மானேசரில் இன்று (13-11-2023) ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐஐசிஏ-வின் டாக்டர் லதா சுரேஷ் மற்றும் லீன் கேம்பஸ் ஸ்டார்ட்அப்ஸ்-சின் நிறுவனர் திரு உமேஷ் ரத்தோட் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

பெருநிறுவனங்கள் (கார்ப்பரேட்) மற்றும் பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரமளிப்பதும், அவர்களின் அறிவு, திறன்களை மேம்படுத்துவதும், தொழிலாளர்களை நிர்வகிப்பதும் இதன் நோக்கம் ஆகும். 

ஐஐசிஏ-வுடன் இணைந்து, லீன் கேம்பஸ் ஸ்டார்ட்அப்ஸ் நிறுவனம் பெண் தொழில்முனைவோர் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சித் திட்டங்களை வழங்கும். 

பெண் தொழில்முனைவோருக்கு அதிகாரமளித்தலில் அவர்களுக்கு வளங்கள், பயிற்சி, வழிகாட்டுதல் மற்றும் பிற ஆதரவு வழிமுறைகள் வழங்கப்படும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel