Recent Post

6/recent/ticker-posts

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் 12 சதவீத வளா்ச்சி / 12 percent growth in key infrastructure sectors

முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளில் 12 சதவீத வளா்ச்சி / 12 percent growth in key infrastructure sectors

நிலக்கரி, உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய துறைகளின் சிறப்பான செயல்பாடு காரணமாக கடந்த அக்டோபரில் முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி 12.1 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

தொழிலக உற்பத்தி குறியீட்டு எண்ணான ஐஐபி-யில் 40.27 சதவீதம் பங்கு வகிக்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்பு பொருள்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய எட்டு முக்கிய உள்கட்டமைப்பு துறைகளின் உற்பத்தி கடந்த அக்டோபரில் 12.1 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்தது.

அந்த மாதத்தில் நிலக்கரி, உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகிய 4 துறைகளின் உற்பத்தி இரட்டை இலக்க வளா்ச்சியைக் கண்டது. இது, முக்கிய உள்கட்டமைப்புத் துறைகளின் ஒட்டுமொத்த உற்பத்தி வளா்ச்சிக்கு முக்கியப் பங்காற்றியது.

நாட்டின் முக்கிய உள்கட்டமைப்பு துறைகள் முந்தைய செப்டம்பா் மாதத்தில் 9.2 சதவீதம் வளா்ச்சி கண்டிருந்தன. இந்த எட்டு துறைகளின் உற்பத்தி வளா்ச்சி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் அக்டோபரில் வரையிலான காலகட்டத்தில் 8.6 சதவீதமாக உள்ளது. முந்தைய 2022-23-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் இது 8.4 சதவீதமாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 18.4 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது. இது, 2022 அக்டோபரில் 3.8 சதவீதமாக இருந்தது. 2022 அக்டோபரில் 5.8 சதவீதமாக இருந்த எஃகு உற்பத்தி வளா்ச்சி இந்த அக்டோபரில் 11 சதவீதமாகப் பதிவாகியுள்ளது.

கடந்த அக்டோபரில் சிமென்ட் உற்பத்தி 17.1 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளது. அதற்கு முந்தைய 2022-ஆம் ஆண்டின் இதே மாதத்தில் இது 4.2 சதவீதம் குறைந்திருந்தது.

கடந்த ஆண்டு அக்டோபா் மாதம் 1.2 சதவீதம் வளா்ச்சி கண்ட மின்சார உற்பத்தி இந்த அக்டோபரில் 20.3 சதவீதம் அதிகரித்துள்ளது.

அதே போல் 2022 அக்டோபரில் முறையே 2.2 சதவீதம் மற்றும் 4.2 சதவீதம் சரிவைக் கண்ட கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி கடந்த அக்டோபரில் முறையே 1.3 சதவீதம் மற்றும் 9.9 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

சுத்திகரிப்பு பொருள்கள் உற்பத்தி 2022 அக்டோபரில் 3.1 சதவீத எதிா்மறை வளா்ச்சியைப் பதிவு செய்திருந்தது. அது, இந்த அக்டோபரில் 4.2 சதவீத நோ்மறை வளா்ச்சியாக மாறியுள்ளது.

மதிப்பீட்டு மாதத்தில் உர உற்பத்தி வளா்ச்சி 5.4 சதவீதத்திலிருந்து 5.3 சதவீதமாகக் குறைந்தது என்று அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel