Recent Post

6/recent/ticker-posts

திரிபுராவில் கோவாய்-ஹரினா சாலையில் 135 கி.மீ தூரத்தை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves upgradation and widening of 135 km Gowai-Harina road in Tripura

திரிபுராவில் கோவாய்-ஹரினா சாலையில் 135 கி.மீ தூரத்தை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் / Union Cabinet approves upgradation and widening of 135 km Gowai-Harina road in Tripura

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, திரிபுரா மாநிலத்தில் மொத்தம் 134.913 கி.மீ நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலை 208-இன் கோவாய் முதல் ஹரினா வரையிலான சாலையை மேம்படுத்தவும் அகலப்படுத்தவும் ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டம் ரூ.2,486.78 கோடி முதலீட்டை உள்ளடக்கியது, இதில் ரூ.1,511.70 கோடி கடனாகும். அதிகாரபூர்வ மேம்பாட்டு உதவி திட்டத்தின் கீழ் ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமையிலிருந்து கடன் பெறப்படும். 

திரிபுராவின் பல்வேறு பகுதிகளுக்கு இடையே சிறந்த சாலை இணைப்பை எளிதாக்குவதற்கும், தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை 8 தவிர திரிபுராவிலிருந்து அசாம் மற்றும் மேகாலயாவுக்கு மாற்று அணுகலை வழங்குவதற்கும் இந்தத் திட்டம் உதவும்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel