ஃபட்டா-2 ஏவுகணைத் தளவாடத்தின் சோதனை புதன்கிழமை நடைபெற்றது. அதில் அந்த ஏவுகணைகள் வெற்றிகரமாக செயல்பட்டன. அதிநவீன மின்னணு சாதனங்களும், உயா்திறன் கொண்ட வழிகாட்டு கருவிகளும் அந்த ஏவுகணைத் தளவாடத்தில் பொருத்தப்பட்டுள்ளன.
400 கி.மீ. தொலைவு வரையிலான இலக்குகளை இந்த ஏவுகணைகள் மிகவும் துல்லியமாகத் தாக்கக் கூடியவை என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.பாகிஸ்தானின் முப்படைகளையும் சோந்த அதிகாரிகள் இந்த ஏவுகணை சோதனையை நேரில் பாா்வையிட்டனா்.
ஏற்கெனவே, தனது கோரி ஏவுகணை தளவாடத்தை கடந்த அக்டோபா் மாதம் பாகிஸ்தான் வெற்றிகரமாக சோதித்துப் பாா்த்தது நினைவுகூரத்தக்கது.
தற்போது சோதித்துப் பாா்க்கப்பட்டுள்ள ஃபட்டா-2 தளவாடத்தின் முன்னோடியான ஃபட்டா-1 ஏவுகணைத் தளவாடம் கடந்த 2021 ஆகஸ்ட் மாதம் முதல்முறையாக சோதிக்கப்பட்டது.
0 Comments