தில்லி செங்கோட்டையில் முதலாவது இந்திய கலை, கட்டிடக்கலை மற்றும் வடிவமைப்பு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் நிகழ்ச்சி 2023 ஐ பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் போது, செங்கோட்டையில் தற்சார்பு இந்தியா வடிவமைப்பு மையத்தை' பிரதமர் திறந்து வைத்தார். நினைவு தபால் தலை ஒன்றையும் அவர் வெளியிட்டார். விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட கண்காட்சியை பிரதமர் திரு மோடி பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், மத்திய கலாச்சாரத் துறை இணையமைச்சர்கள் திரு. ஜி. கிஷன் ரெட்டி, திரு அர்ஜுன் ராம் மேக்வால், திருமதி மீனாட்சி லேகி மற்றும் கட்டிடக்கலைஞர்களின் முதன்மை கட்டிடக் கலைஞர் திருமதி டயானா கெல்லாக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 Comments