தெலங்கானா மாநிலத்தில் உள்ள முலுகுவில் சம்மக்கா சாரக்கா மத்தியப் பழங்குடியினர் பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்காக மத்தியப் பல்கலைக்கழகங்கள் சட்டம், 2009-ஐ மேலும் திருத்துவதற்கான மத்தியப் பல்கலைக்கழகங்கள் (திருத்த) மசோதா, 2023 மாநிலங்களவையில் டிசம்பர் 13, 2023 அன்று நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இப்பல்கலைக்கழகம் ரூ.889.07 கோடி செலவில் அமைக்கப்படும். இப்பல்கலைக்கழகத்தில் 11 துறைகளைக் கொண்ட 5 பள்ளிகளின் கீழ் பட்டப்படிப்பு, முதுகலை மற்றும் முனைவர் நிலை படிப்புகள் இருக்கும்.
இந்தப் பழங்குடியினர் பல்கலைக்கழகத்தின் முதல் ஏழு ஆண்டுகளில் மொத்தம் 2790 இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்கள் பணியாற்ற உத்தேசிக்கப்பட்டுள்ளது. இப்பல்கலைக்கழகம் நிறுவப்படுவதன் மூலம் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களில் நேரடி வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தவிர, வெளியிடப்பணி/ ஒப்பந்த அடிப்படையில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும். இதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகள் பல்வேறு சேவைகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மூலம் மேம்படுத்தப்பட்டு மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தெலங்கானாவின் பழங்குடி சமூகங்களைப் பாதுகாக்க அனுப்பப்பட்ட ஆதி பராசக்தியின் வெளிப்பாடுகள் என்று நம்பப்படும் தாய் மற்றும் மகள், சம்மக்கா மற்றும் சரலம்மா (பொதுவாக சாரக்கா என்று அழைக்கப்படுகிறார்கள்) ஆகியோரின் நினைவாக இப்பல்கலைக்கழகத்திற்கு "சம்மக்கா சாரக்கா மத்தியப் பழங்குடிப் பல்கலைக்கழகம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
0 Comments