Recent Post

6/recent/ticker-posts

2024-2027 கல்வியாண்டிற்கான அங்கீகார நடைமுறைக் கையேட்டை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது / AICTE has released the accreditation procedure manual for the academic year 2024-2027

2024-2027 கல்வியாண்டிற்கான அங்கீகார நடைமுறைக் கையேட்டை ஏஐசிடிஇ வெளியிட்டுள்ளது / AICTE has released the accreditation procedure manual for the academic year 2024-2027

2024-2027 கல்வியாண்டிற்கான ஏஐசிடிஇ அங்கீகார நடைமுறைக் கையேட்டை புதுதில்லி சாஸ்திரி பவனில் உள்ள பத்திரிகைத் தகவல் அலுவலக மாநாட்டு மண்டபத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏஐசிடிஇ-யின் தலைவர் பேராசிரியர் டி.ஜி. சீதாராம், துணைத் தலைவர் டாக்டர் அபய் ஜெர் மற்றும் உறுப்பினர் செயலாளர் பேராசிரியர் ராஜீவ் குமார் ஆகியோர் வெளியிட்டனர்.

அங்கீகார நடைமுறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சில புதிய மாற்றங்கள்

  • சிறப்பாகச் செயற்படும் நிறுவனங்களுக்கு 3 ஆண்டுகள் வரை அனுமதியை நீடிப்பதற்கான ஏற்பாடு.
  • ஏற்கெனவே சிறப்பாக செயல்படும் நிறுவனங்களால் வழங்கப்படும் படிப்புகளில் சேர்க்கைக்கான உச்ச வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. இருப்பினும், சேர்க்கையைக் கோருவதற்கு முன்பு நிறுவனங்கள் தரமான உள்கட்டமைப்பு மற்றும் தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
  • இணைப்புப் பல்கலைக்கழகங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடமிருந்து ஆவணங்கள் மற்றும் தடையில்லா சான்றிதழ் தொடர்பான செயல்பாடுகளைக் குறைத்தல்.
  • தொழில்நுட்ப மற்றும் மேலாண்மைக் கல்வியில் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வதற்காக இளங்கலை படிப்புகளான பி.சி.ஏ போன்றவையும் மேலாண்மைப் படிப்புகளான பி.பி.ஏ போன்றவையும் ஏஐசிடிஇ-யின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • திறந்த மற்றும் தொலைதூரக் கல்வி, இணையவழிக் கற்றல் போன்றவற்றுக்கான ஒப்புதல் செயல்முறை குறித்த கூடுதல் தெளிவு தரப்பட்டுள்ளது.
  • 2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவை ஒரு தொழில்நுட்ப மையமாக மாற்ற நாட்டில் முழுமையான, தரமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் எளிதில் அணுகக்கூடிய தொழில்நுட்பக் கல்வியை ஊக்குவிக்க ஏஐசிடிஇ உறுதிபூண்டு செயல்பட்டு வருகிறது.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel