காலனிய ஆட்சிக்கால குற்றவியல் சட்டங்களுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்ட மூன்று குற்றவியல் சட்ட மசோதாக்களும் மக்களவையில் குரல் வாக்கெடுப்பின் மூலம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டன.
பாரதிய நியாய சன்ஹிதா, பாரதியா நாகரிக் சுரக்ஷ சன்ஹிதா மற்றும் பாரதிய சாக்ஷ மசோதா ஆகிய மூன்று மசோதாக்களையும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த வாரம் மக்களவையில் தாக்கல் செய்தார்.
இந்த மூன்று மசோதாக்களும் முறையாக இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1898 மற்றும் இந்திய சாட்சிகள் சட்டம் 1872 ஆகியவற்றிற்கு மாற்றாக அமையும்.
0 Comments