தற்போது நாட்டில் நடைமுறையில் உள்ள, 125 ஆண்டு பழமையான இந்திய தபால் அலுவலக சட்டத்துக்கு மாற்றான, தபால் அலுவலக மசோதா, ராஜ்யசபாவில் நிறைவேறியது.தபால் அலுவலகங்கள் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும், இந்திய தபால் அலுவலக சட்டம், 1898ல் நடைமுறைக்கு வந்தது.
இதை தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ப திருத்தியமைக்கும் வகையில், தபால் அலுவலக மசோதா, கடந்த மழைக்கால கூட்டத் தொடரில் ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா ராஜ்யசபாவில் நிறைவேறியது.
இந்த சட்டத்தின்படி, நாட்டின் பாதுகாப்பு மற்றும் நட்பு நாடுகளின் நலன், மக்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக, தபால் வாயிலாக அனுப்பப்படும் பொருட்களை ஆய்வு செய்ய, அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது.
0 Comments