போலந்தில் கடந்த அக்டோபர் 15ஆம் தேதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காததைத் தொடர்ந்து, மத்தியவாதக் கட்சித் தலைவர் டொனால்டு டஸ்க்கின் தலைமையில் அரசு அமைக்க, வெற்றி பெற்ற கட்சிகளின் தலைவர்கள் சிலர் ஒன்று சேர்ந்து முடிவெடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து டிச.12 அன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், டஸ்க் தலைமையிலான அரசுக்கு ஆதரவு கிடைத்து வெற்றி பெற்றது. இதன்மூலம், போலந்தில், சட்டம் மற்றும் நீதிக் கட்சியின் 8 வருட ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், போலந்து அதிபர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், டொனால்டு டஸ்க்குக்கு, போலந்து அதிபர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அவருடன் சேர்ந்து சில அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.
0 Comments