உலகளாவிய சவால்களுக்கு இடையே இந்தியாவின் பொருளாதார உறுதியையும், வளர்ச்சியையும் சர்வதேச செலாவணி நிதியம் (ஐஎம்எஃப்) பாராட்டியுள்ளது.
இந்தியா நட்சத்திர செயல்பாட்டாளராக வளர்ந்து வருகிறது என்றும், உலகளாவிய வளர்ச்சியில் இதன் பங்களிப்பு 16 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது என்றும் இந்த நிதியம் தனது வருடாந்திர அறிக்கையில் கூறியுள்ளது.
விவேகமான பருண்மைப் பொருளாதார கொள்கைகளின் வழிகாட்டுதலோடு இந்த ஆண்டு உலகில் அதிவேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்கிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments