பத்திரிகை மற்றும் பருவ இதழ்கள் பதிவுக்கான நடைமுறையை எளிமைப்படுத்தும் மசோதா நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது.
ஆங்கிலேயா் காலத்தில் இயற்றப்பட்ட பத்திரிகை மற்றும் புத்தகங்கள் பதிவுச் சட்டம், 1867-க்கு மாற்றாக இந்த மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலங்களவையில் கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. மக்களவையில் வியாழக்கிழமை குரல் வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்டது
0 Comments