Recent Post

6/recent/ticker-posts

திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் / Trinamool MP Mahua Moitra sacked

திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா பதவி நீக்கம் / Trinamool MP Mahua Moitra sacked

திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா மக்களவையில் இருந்து பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மக்களவையில் அதானி குழுமத்துக்கு எதிராக கேள்வி எழுப்ப, தொழிலதிபா் தா்ஷன் ஹீராநந்தானியிடம் இருந்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம் வாங்கியதாக மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே புகாா் அளித்தாா்.

இந்தப் புகாரை விசாரிக்க மக்களவை நெறிமுறைகள் குழுவுக்கு ஓம் பிா்லா பரிந்துரைத்தாா். அதன்படி, நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு இதுகுறித்து விசாரித்து வந்தது.

தொடர்ந்து, நெறிமுறைகள் குழு, மஹுவாவை எம்.பி. பதவியில் இருந்து நீக்க பரிந்துரைத்து அறிக்கை ஒன்றை தயார் செய்தது. அந்த அறிக்கையை குழுவின் தலைவா் வினோத் குமாா் சோன்கா் மக்களவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தாக்கல் செய்தார். அப்போது அமளி காரணமாக பிற்பகலுக்கு அவை ஒத்திவைக்கப்பட்டது.

இன்று பிற்பகல் அந்த அறிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ராவை நீக்கம் செய்யும் தீர்மானம் கொண்டு வரப்பட்டு, குரல் வாக்கெடுப்பு மூலமாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து மக்களவையில் இருந்து திரிணமூல் எம்.பி. மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டதாக அவைத் தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார்.

Post a Comment

0 Comments

close

Join THERVUPETTAGAM Telegram Channel

Join Telegram Channel