அரசுப் பணிகளுக்கான போட்டித் தோ்வுகளில் முறைகேடுகளில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறை, ரூ.1 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் மசோதா மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை நிறைவேறியது.
எதிா்க்கட்சி உறுப்பினா்கள் முன்மொழிந்த திருத்தங்கள் நிராகரிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது.
கணினி வழியிலான தோ்வுகளை மிகவும் பாதுகாப்பாக நடத்துவது தொடா்பான பரிந்துரைகளை அளிப்பதற்காக தேசிய அளவிலான உயா்நிலைக் குழு ஒன்றை அமைக்கவும் இந்த மசோதாவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இந்த மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை நிறைவேற்றப்பட்ட நிலையில் தற்போது மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குப் பிறகு இந்த மசோதா சட்டமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments